2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆ ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் இன்று (மே 15) ஜாமீன் வழங்கியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி ஆர் பாலு, நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. ராசாவுக்கு திமுக எப்போதும் துணைநிற்கும் எனத் தெரிவித்தார்.
