You are here: Home HOME NEWS மதுரை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனைய கட்டடம்

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

மதுரை விமான நிலையத்தின் ஒருங்கிணைந்த புதிய முனைய கட்டடம்

Print

 

மதுரை விமான நிலையத்தின்  ஒருங்கிணைந்த புதிய முனைய கட்டடம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. சர்வதேச தரத்தில் புதிய முனையம் 129 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு வரும்  "ஜெட்ஏர்வேஸ்' விமானப் பயணிகள் காலை 7.50 மணிக்கு புதிய முனையம் வழியாக வருகிறார்கள்.

அந்த விமானத்தில் பயணம் செய்த நமது ஊரைச்சார்ந்த எமிரேட்ஸ் அழகங்குளம் முஸ்லிம் ஜமாத்தின் தலைவர் V.M.A.S. முஹமது மன்சூர்   அவர் தம் குடும்பத்தாருடன் முதல் பயணிகளாக வெளிவரும்  காட்சி  அவருடன் நண்பர் A. சீனி இபுராஹீம்

சென்னை செல்லும் பயணிகளும் புதிய முனையத்தில் இருந்து காலை 8.40 க்கு வழியாக செல்கிறார்கள்.  தொடர்ந்து இந்த புதிய முனையம் பயன்பாட்டிற்கு வருகிறது. பழைய முனையத்தில் நேற்று இரவு 7.55 மணிக்கு, சென்னையில் இருந்து வந்த ஜெட்ஏர்வேஸ் விமானம், இரவு 8.20 மணிக்கு அதே முனையம் வழியாக சென்னைக்கு  புறப்பட்டது. அத்துடன் இந்த பழைய முனையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி  சங்கையா பாண்டியன் கூறுகையில்,  "" புதிய முனையம் பயன்பாட்டிற்கு வந்தாலும், விமானங்கள் நிறுத்தப்படும் இடங்களில் தற்போது மாற்றம் இல்லை. புதிய முனையத்தின் வழியாக பயணிகள் வந்து, செல்ல  அனைத்து வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.

மதுரை விமான நிலையத்தின்  ஒருங்கிணைந்த புதிய முனைய கட்டடம்

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்