You are here: Home TAMIL NEWS

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

Tamil news

பாகிஸ்தானில் யு.எஸ்.ட்ரோன் தாக்குதலில் 21 பேர் பலி

Print

Monday, 06 June 2011 10:45

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள வசிரிஸ்தான் பள்ளத்தாக்கில் அமெரிக்காவின் ட்ரோன் எனும் விமானியற்ற வேவு விமானம் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வசிரிஸ்தானின் ஷாலம் ராக்சாய், வாச்சா டானா ஆகிய இடங்களைக் குறிவைத்து முதல் தாக்குதல் நடந்ததாகவும், அதில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானவர்கள் காயமுற்றதாகவும் அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு வசிரிஸ்தானில் நடந்த தாக்குதலில் இரண்டு ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும், அதில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்விரு தாக்குதல்களிலும் காயமுற்ற பலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள வசிரிஸ்தான் பள்ளத்தாக்கில் அமெரிக்காவின் ட்ரோன் எனும் விமானியற்ற வேவு விமானம் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.வசிரிஸ்தானின் ஷாலம் ராக்சாய், வாச்சா டானா ஆகிய இடங்களைக் குறிவைத்து முதல் தாக்குதல் நடந்ததாகவும், அதில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானவர்கள் காயமுற்றதாகவும் அந்நாட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.தெற்கு வசிரிஸ்தானில் நடந்த தாக்குதலில் இரண்டு ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும், அதில் மேலும் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இவ்விரு தாக்குதல்களிலும் காயமுற்ற பலர் கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 

Page 2763 of 3147

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்