Tuesday, 07 February 2012 04:02
| < Prev | Next > |
|---|
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 12ம் தேதி துவங்க உள்ளது. அன்றைய தினம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரையாற்றுவார். மார்ச் 14ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 15ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்படும்.
இதையடுத்து 16ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 12ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடைபெறும். பின்னர் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி துவங்கி மே 22ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்.
பொதுவாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் துவங்குவது வழக்கம். ஆனால், 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் கூட்டத் தொடரும் பட்ஜெட் தாக்கலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy