You are here: Home TAMIL NEWS கதம்பம் ராமதாசின் சகோதரரிடம் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

ராமதாசின் சகோதரரிடம் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி

Print

சென்னை: அ.‌தி.மு.க. ‌பிரமுக‌ர் கொலை வழ‌க்‌கி‌ல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் தம்‌பி ‌‌சீ‌னுவாச‌னை ஒரு நா‌ள் காவ‌லி‌ல் எடு‌த்து ‌விசா‌ரி‌க்க ‌சி.‌பி.ஐ‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு மே 8ம் தேதி இப்போதைய வணிக வரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டின் அருகே வைத்து அ.தி.மு.க. பிரமுகரும் சண்முகத்தின் உதவியாளருமான முருகானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இ‌ந்தக் கொலை வழ‌க்கு தொடர்பாக ரோசணை காவல் நிலையத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது தம்பி சீனுவாசன்,கட்சியின் மாநில துணைத் தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது சி.வி.சண்முகம் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 6ம் தேதி கோபி (28) செந்தில்குமார் (25), பன்னீர் செல்வம்(31) நடராஜ் (32) ஜெயராஜ் (30) அனந்தகிருஷ்ணன் (25) குமரன் (37), இளஞ்செழியன் (32) ஆகிய 8 பேரை ‌சி‌.‌பி.ஐ கைது செய்தது.

ஜனவரி 25ம் தேதி ராமதா‌சின் தம்பி சீனுவாசன், பா.ம.க. மாநில துணைத் தலைவர் கருணாநிதி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளன‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் சீனுவாசனை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சி.பி.ஐ மனு செய்தது. ஆனால், அந்த தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது சிபிஐ.

இ‌ந்த மனு ‌நீ‌‌திப‌தி ம‌திவாண‌ன் மு‌ன்பு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, ‌சீனுவாசனை ஒரு நா‌ள் ம‌ட்டு‌ம் காவ‌லி‌ல் எடு‌‌த்து ‌விசா‌ரி‌க்க ‌சி.‌பி.ஐ‌க்கு ‌நீ‌திப‌தி அனும‌தி அ‌ளி‌த்து உ‌த்தர‌வி‌ட்டா‌ர்.

ராமதாசின் சகோதரரிடம் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும் பிறகு அதை காப்பி செய்து மேலே உள்ள கமெண்ட்ஸ் பாக்ஸில் நிரப்பவும்