You are here: Home

தமிழ் என்று எழுத tamil என்று ஆங்கிலத்தில் எழுதி ஸ்பேஸ் பாரை தட்டவும்

இறால் சில்லி 65--சமையல் குறிப்புகள்

Print

Saturday, 08 October 2011 20:17

இறால் சில்லி 65
தேவையான பொருட்கள்

இறால் - 1/2 கிலோ
அரிசிமாவு - 2 கை
சோளமாவு - 1 கை
மைதா - 1 கை
முட்டை - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 3 டீஸ்பூன் (அரைத்த விழுது)
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை

* இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும்.

* அரைத்த அரிசி மாவு, சோளமாவு, மைதா, மஞ்சள்தூள் அரைத்த மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, தனியாத்தூள், சீரகப்பொடி, கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு, எலுமிச்சம் பழச்சாறு அனைத்தையும் நீர் தெளித்து பேஸ்ட் பதத்தில் பிசையவும்.

* இறாலை இக்கலவையில் புரட்டி காய்ந்த எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
--------------------------------------------------------------------

 

இட்லி மஞ்சூரியன்--சமையல் குறிப்புகள்

Print

Saturday, 08 October 2011 20:16

இட்லி மஞ்சூரியன்
தேவையானவை

இட்லி - 6
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1/2 சிட்டிகை
கறி மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் + நெய் - தேவையான அளவு
செய்முறை

இட்லியை துண்டுகளாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவிட்டு அதில் பொரித்து எடுத்து தனியே வையுங்கள்.

பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி வதக்கவும்.

வதங்கியதும் மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ, மிளகாய்த்தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

நன்கு வதங்கியதும் பொரித்து வைத்த இட்லி துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி, பச்சைக் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கி வைக்கவும்.

சூடான இட்லி மஞ்சூரியன் ரெடி.
குறிப்பு

அஜினோமோட்டோ குழந்தைகளுக்கு அதிகம் ஒத்துக்கொள்ளாது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தவும்.

------------------------------------------------------------------

 

மட்டன் கீமா புலாவ்--சமையல் குறிப்புகள்

Print

Saturday, 08 October 2011 20:16

மட்டன் கீமா புலாவ்
தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 2 கப்
கொத்துக்கறி - 300 கிராம்
தயிர் - 2 கப்
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கம் - 6
ஏலக்காய் - 8
மிளகு - 1/2 டீஸ்பூன்
பாதாம் - 1/4 கப்
பிஸ்தா - 1/4 கப்
காய்ந்த திராட்சை - 1/2 கப்
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
நெய் - 5 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை

* ஒரு பாத்திரத்தில் 5 டேபிள் ஸ்பூன் நெய்விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* இதனுடன் மிளகு, ஏலக்காய், லவங்கம், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பாதாம் பிஸ்தா, கிஸ்மிஸ், குங்குமப்பூ சேர்த்து சுத்தம் செய்த கீமாவைச் சேர்த்து வதக்கவும்.

* இப்போது போதுமான உப்பு சேர்க்கவும். தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் கறியை வேகவிடவும்.

* பிரஷர் போனதும் திறந்து பாசுமதி அரிசியைச் சேர்த்து 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும்.

* மட்டனும், அரிசியும் வெந்ததும் மூடியைத் திறந்து ஒரு கிளறு கிளறி மட்டன் கீமா புலாவைப் பரிமாறவும்.
---------------------------------------------------------------------------------------

 
 

ரிப்பன் முறுக்கு--சமையல் குறிப்புகள்

Print

Saturday, 08 October 2011 20:16

ரிப்பன் முறுக்கு
தேவையானவை

புழுங்கலரிசி - 3 டம்ளர்.
பொட்டுக்கடலை - 1 டம்ளர்.
தேங்காய் - 1 மூடி
பச்சை மிளகாய் - 6
பெருங்காயம் - சிறு துண்டு
எள் - 1 டீஸ்பூன்
உப்பு - 3 டீஸ்பூன்
டால்டா - 4 டீஸ்பூன்
சூரியகாந்தி எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை

அரிசியை நன்றாக ஊற வைத்து கிரைண்டரில் நைஸாக கெட்டியாக வதக்கவும்.

பொட்டுக்கடலையை மிக்சியில் தூள் செய்து கொள்ளவும். தேங்காய், பச்சைமிளகாய், பெருங்காயம் உப்பு இவைகளை அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த அரிசி மாவுடன் பொட்டுக் கடலைத்தூள், அரைத்த தேங்காய்க் கலவை, எள், டால்டா, எல்லாவற்றையும் போட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து முறுக்கு குழாயின் ரிப்பன் அச்சில் மாவை இட்டு எண்ணையில் ஒரு சுற்று பிழிந்து விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு முறுக்குபோல சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.
குறிப்பு

வழக்கமான முறுக்கு செய்வதை விட இந்தப் பொட்டுக்கடலை முறுக்கு, வித்தியாசமான சுவையுடன் மொறுமொறுப்பாக இருக்கும். காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்திருந்து சாப்பிடலாம்.

 

அதிவேக இணைய தொடர்பு

Print

Saturday, 08 October 2011 11:02

உலகில் இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள், எவ்வளவு வேகத்தில் இணைய இணைப் பினையும் தொடர்பினையும் வழங்கு கிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் (Pando Networks) என்னும் அமைப்பு ஆய்வு செய்தது.

ஆய்வின் முடிவில், அதிவேக இணைப்பு தரும் நாடுகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக, தென் கொரியா நாட்டில் இயங்கும் நிறுவனங்களைக் கண்டறிந்தது.

இங்கு சராசரியாக, நொடிக்கு 2202 கிலோ பிட்ஸ் வேகத்தில் இணைய தொடர்பு இயக்கப்படுகிறது.

ரொமானியா மற்றும் பல்கேரியா அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இவை முறையே 1,909 மற்றும் 1,611 கிலோ பிட்ஸ் வேகத்தைத் தருகின்றன.

முதல் இரண்டு இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளில் உள்ள வேக இணைப்பிற்கு இடையே உள்ள வித்தியாசம் மூலம், தென் கொரியா நாடு எந்த அளவிற்கு இதில் முன்னேறியுள்ளது என்பதனை அறியலாம்.

காங்கோ நாடுதான் மிகவும் கீழாக, விநாடிக்கு 13 கிலோ பிட்ஸ் வேகத்தில் இன்டர்நெட் தொடர்பினை வழங்குகிறது. பொருளாதாரத்தில் உயர் நிலையை அடைந்துள்ள நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் கனடா நாடுகளில் உள்ள இன்டர்நெட் இணைப்பின் வேகம், அதிவேகம் என்ற எல்லைக்குள் வரவே இல்லை.


கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அதிவேக இணைப்பு தரப்படுவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா பன்னாட்டளவில் 26 ஆவது இடத்தையே பிடித்துள்ளது. நகரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் கூட, முதல் பத்து இடங்களில் அமெரிக்க நகரங்கள் வரவில்லை.

இந்த ஆய்வு, இந்த ஆண்டில் ஜனவரி தொடங்கி ஜூன் வரை மேற்கொள்ளப் பட்டது. 224 நாடுகளில், இரண்டு கோடி கம்ப்யூட்டர் களில், இரண்டு கோடியே 70 லட்சம் டவுண்லோட் செய்யப்பட்டு நடத்தப்பட்டது. உலக அளவில் சராசரி இணைய இணைப்பு வேகம் நொடிக்கு 580 கிலோ பிட்ஸ் எனக் கண்டறியப்பட்டுள்ளது


Source:Blogspot.com

 
 

Page 226 of 334