‘எண்டோ ஓ.ஆர்.எல்-2012′ (ENDO ORL – 2012) என்ற எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சை முகாமை ஐந்தாவது முறையாக நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது சென்னை, தி.நகரில் உள்ள கிருஷ்ணா கண்-இ.என்.டி மருத்துவமனை.
பிப்ரவரி 3,4,5 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை முகாமில் 300 இ.என்.டி மருத்துவர்களுக்கு அடிப்படை முதல் மேல் மட்ட நுணுக்கமான அறுவை சிகிச்சை வரை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்தியாவின் தலை சிறந்த மருத்துவர்களால் காது, மூக்கு, சைனஸ், தொண்டை, கண் மற்றும் மூளை சம்பந்தமான நோய்களை குணப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை முகாமிற்கு டாக்டர் ஜி.சுந்தர கிருஷ்ணன் தமைமை பொறுப்பு எற்றார். இவர் எண்டோஸ்கோப்பி மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்வதில் பி.எச்.டி பட்டம் பெற்றவர். அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்தவர்.
இந்த அறுவை சிகிச்சை முகாமை ஊக்குவிக்கும் வகையில், பிரப்ரவரி 4ஆம் தேதியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா கலந்துகொண்டு டாக்டர் சுந்தர கிருஷ்ணனின் பணியையும், அறுவை சிகிச்சை முகாமையும் வாழ்த்தி பேசினார். மேலும் அறுவை சிகிச்சை நிபுணர்களை கெளரவித்து அவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கினார். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைகழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில் வாஹனன் நடராஜன் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார். மெட்ராஸ் மருத்துவ கல்லூரி மற்றும் UIORL-ன் நிர்வாகி பேராசிரியர் டாக்டர்.ஏ.முரளிதரன் முக்கிய உறையாற்றினார்.
எண்டோஸ்கோப்பி அறுவை சிகிச்சையைப் பற்றி டாக்டர் சுந்தர கிருஷ்ணன் கூறுகையில், “தலை மற்றும் கழுத்து சம்பந்தமான பிரச்சனைகளை எளிதாக தீர்க்கும் அளவிற்கு நாஸல் எண்டோஸ்கோப்பி புரட்சிகரமான முன்னேற்றத்தை எட்டி இருக்கிறது. இந்த நாஸல் எண்டோஸ்கோப்பி சிகிச்சை முறையில் உடலின் வெளிப்புறத்தில் கத்தியால் அறுத்து சிகிச்சை செய்யாமல் இயற்க்கையாக உள்ள முக்கு தொண்டை காது வழியாக எண்டோஸ்கோப்பி முறையில் சிகிச்சை செய்யப்படுவதால் வெளிப்புற தழும்புகளோ, மண்டை ஓட்டை துளைக்க வேண்டிய அவசியமோ ஏற்படுவதில்லை.
அழகு பாதிக்கப்படாமல் இருப்பது இந்த சிகிச்சை முறையின் தனி சிறப்பு. பாதிக்கப்பட்ட பகுதியை பன் மடங்கு பெரிதாக்கி பார்க்கும் வசதி உள்ளதால் முக்கிய உறுப்புகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை என்பதுடன் நோயும் திறம்பட தீக்கப்படுகிறது. அவசர நிலை ஏதுவும் ஏற்படுவதில்லை. அறிதான சில கேஸ்களின் நோயின் அறிகுறி திரும்ப தென்பட்டாலும் முதல் முறை செய்யப்பட்ட அதே வழியாக திரும்ப அறுவை சிகிச்சை செய்வதால் புதிதாக தழும்புகளோ, மாற்றமோ ஏற்படாது. மிக குறைவான அறுவை செய்யப்படுவதால் மருத்துவமனியில் ஒரு நாள் பகலோ அல்லது இரவோ இருந்தால் மட்டுமே போதுமானது.இந்த பயிற்சி முகாமின் நோக்கம் இந்த எண்டோஸ்கோப்பி போர்டபில் இயந்திரத்தை திறமையாக கையாள பயிற்சி அளிப்பது மற்றும் மருத்துவர்களை இந்த சிகிச்சை முறையை பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு எடுத்துச் செல்ல தூண்டுவதுதான்.” என்றார்.
